Saturday, December 6, 2008
துப்பாக்கியுடன் விமானத்தில் அமிதாப்
Friday, December 5, 2008
திவாலாகும் மிக பெரிய நிறுவனங்கள்
Sunday, November 30, 2008
நெத்தியடி
Saturday, November 29, 2008
மும்பை தந்த பாடம்
Sunday, October 12, 2008
நிதி நெருக்கடியும் தனி மனித பாதிப்புகளும்
Saturday, October 4, 2008
வருங்காலம் எப்படி இருக்கும்?
Wednesday, September 17, 2008
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் லஞ்சம் ...
Friday, August 22, 2008
வலைப்பதிவில் கவர்ந்தது
சமீபத்தில் படித்த தமிழ் வலை பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்த இந்த பதிவை கீழே தந்துள்ளேன். ஒவ்வொரு தமிழாக்கத்தையும் நான் மிகவும் ரசித்தேன். ( நன்றி அப்துல் மாலிக்,முத்துபேட்டை நண்பர்களின் வலைப்பதிவு )
"பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் அவர் கண்டுபிடித்த விண்டோசை சென்னை மக்கள் எப்படி அழைத்திருப்பார்கள். என்று பார்போம்
அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.
windows = ஜன்னல்
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு
- ரசிகவ் ஞானியார் "
Saturday, August 16, 2008
காஷ்மீரும் அமர்நாத் பிரச்னையும்
இது மட்டுமல்ல ,காலம் காலமாக அமர்நாத் யாத்திரை சென்று வரும் பக்தர்களுக்கும் சாதுக்களுக்கும் , காஷ்மிரீ முஸ்லீம்கள் அன்னதானம் செய்து வந்திருக்கிறார்கள்.இன்றும் செய்கிறார்கள்.இரு சமுதாயத்தினரிடையே உள்ள நல்லெண்ணத்திற்கு இதுவே சான்று.இப்படி இருக்கையில் அரசாங்கத்தால் அமரநாத் ஆலயத்திற்கு அளிக்கப்பட்ட நிலத்திற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்களா ? இது அரசியல் ஆதாயம் தேட சில அரசியல் கட்சிகள் செய்த சூழ்ச்சி.அதே அரசாங்கம் நிலம் அளித்ததை திரும்ப பெற்ற பின்னும் போராட்டங்கள் நடைபெறுவது எதை காட்டுகிறது? அமைதியை விரும்பும் பொதுமக்கள் என்று தான் இதை எல்லாம் புரிந்து கொள்வார்களோ? இன்று நடக்கும் போராட்டம் நிலம் அளித்ததை எதிர்த்து அல்ல. அந்த பெயரில் ஆரம்பித்த போராட்டம் இன்னும் தொடருகிறது.வழக்கம் போல ஆடு நனைந்தால் ஓநாய் வருத்தப்படுவது போல நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்த சாக்கில் குளிர் காய நினைக்கிறது.அதிபர் முஷாரப்க்கு இருக்கும் உள்ளூர் நெருக்கடியில் இருந்து தப்புவதற்காக அமர்நாத் பிரச்னையில் மூக்கை நுழைக்கிறார்.இதை நாம் அனுமதிக்கலாமா? அரசியல் மாட்சியங்களை மறந்து ,நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக சம்பந்தபட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடாமல் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் .
Thursday, August 7, 2008
மறந்து போன திறன்கள்
கம்ப்யூட்டர் ,லேப்டாப், மொபைல் போன் பயன்படுத்தி அவர்களுக்கு எழுத மறந்து போய்விட்டதாம். இது நமது நகரத்து குழைந்தளுக்கும் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இப்போது தான் தேர்வுகளே ஆன்லைனில் எழுதும் காலம் ஆயிற்றே .
சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்று சொன்ன காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. ஏ.ட்டி.எம் இல் பணம் எடுத்து பழகி விட்ட இன்றைய இளைஞர்கள் பலரும் காசோலையில் தனது கைஎழுத்தயே தவறாக போட்டு விட்டு வங்கியில் சென்று வழிவதை பார்க்கலாம். 150 ஐ 60 ஐயும் பெருக்க இன்று கால்குலேடோர் வேண்டும். கணினி முன்பும் தொலைக்காட்சி முன்பும் அமர்ந்து விளையாட மறந்து விட்டார்கள் இன்றைய குழந்தைகள். இன்னும் என்ன என்ன மறக்க போகிறார்களோ ? . காலம் தான் பதில் சொல்லும்.
Thursday, July 17, 2008
எப்படி வந்தது என்று புரியவில்லை
'எந்த பிரச்சினயாக இருந்தாலும் அவர் அசால்டா சமாளிச்சிடுவார்.'
'எதை பற்றியும் கவலையே இல்லை .எப்ப்பவும் அசால்ட் தான்.'
இந்த இடத்தில் அசால்ட் என்ற சொல் என்ன அர்த்தத்தில் பயன் படுத்த பட்டிருக்கிறது என்று பார்ப்போம். சுலபமாக, அனாயசமாக கைகாரியம் செய்யும் திறமை உள்ளவர் என்ற பொருள் .
இரண்டாவது எடுத்துக்காட்டில், care free என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல ஒரு மன நிலை என்ற பொருளில் சொல்லபட்டிருக்கிறது.
தமிழில் அசால்ட் என்று சொல் இல்லை. ஆங்கிலத்தில் அசால்ட் என்றால் ஒருவரை தாக்குவது . ஆங்கில சொல்லுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு பொருளில் இந்த சொல் எப்படி பயன்பாட்டில் வந்திருக்கும் என்று யோசித்ததில் என் அறிவிற்கு எட்டியது என்ன என்று பார்போம். தமிழில் அசட்டை என்று ஒரு சொல் உண்டு. அதன் பொருள் இப்பொழுது சொல்லப்படும் பொருளுக்கு சற்று பொருத்தமாக இருக்கிறது. அசட்டை( indifferent ) என்று ஆங்கிலத்தில் ஒரு பொருள் உண்டு. அந்த பொருள் ஏறக்குறைய சரியாக வரும். அசட்டை என்ற தமிழ் சொல்லை தான் தவறாக அசால்ட் என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
இதை விட கொடுமை இன்னொன்று இருக்கிறது. சாதரணமாக பேச்சு வழக்கில் இருக்கும் நல்ல தமிழ் சொற்களை அப்படியே ஆங்கில மொழி மாற்றம் செய்து பேசுபவர்கள் சிலர் உண்டு. இதை இந்திய ஆங்கிலம் என்று கூட சொல்லலாம்.
அந்த காலத்தில் பெண்கள் மத விடாய் காலத்தில் வீட்டில் இருந்து சற்று விலகி இருப்பார்கள். அதற்க்கு சில சமூகத்தினர் 'தூரம்' என்றும் ( வீட்டிலிருந்து தூரத்தில் இருப்பது ), இன்னும் சிலர் 'வீட்டு விலக்கு ' என்று குறிப்பிட்டு வந்தார்கள். ஏனோ சிலர் இப்படி சொல்வது கொச்சையாக இருக்கிறது என்று கருதினார்களோ என்னவோ, அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து 'out of doors'
என்று சொல்கிறார்கள்.
நண்பர் ஒருவரை சந்திக்க போயிருந்தேன். அவரும் இது போல தமிழ் சொற்களை ஆங்கில மொழி மாற்றம் செய்து பேசுபவர். அவர் வரும் வரை காத்திருந்தேன். வீட்டிற்குள் இருந்து வரும் போதே அவர் 'சாரி , அவுட்ட்சைடு போயிருந்தேன் '
என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டிற்குள் இருந்து தானே வருகிறார் , ஏன் இப்படி சொல்கிறார் என்று வியந்தேன். எனது வியப்பை புரிந்து கொண்டு அவர் மீண்டும் தன் கால்களை பார்த்து கொண்டே 'அவுட்டுசைடு போயிருந்தேன்'. ஈரமாக இருந்த அவரின் கால்களை பார்த்து நான் ஓரளவு புரிந்து கொண்டேன். அவர் கழிப்பறையில இருந்து வந்திருக்கிறார் என்று. வீட்டிற்குள் இருக்கும் கழிப்பறையில் இருந்து வருவதை அவர் ஏன் ஆங்கில சொல் ஆன
அவுட்ட்சைடு என்று குறிப்பிடுகிறார் என்று நான் யோசித்தேன். இதுவும் கழிப்பறையில் இருந்து வருகிறேன் என்று சொன்னால் கொச்சையாக இருக்கும் என்று கருதி அப்படியே ஆங்கில மொழி மாற்றம் செய்து பேசுகிறார்கள். சரி, இந்த சொல் எப்படி தான் வந்திருக்கும் ?
அந்த காலத்தில் வீட்டிற்குள் கழிப்பறைகள் இருந்ததில்லை . காலை கடன்களை
கழிப்பதற்கு வெட்ட வெளிக்கு தான் போவார்கள் . வெட்ட வெளிக்கு போவது தான் கால போக்கில் வெளிக்கு போவது என்று மாறிவிட்டது . வெளிக்கு போவது என்றால் எல்லாருக்கும் புரியும். ஆனால் வீட்ட்ற்க்குள் கழிப்பறைகள் வந்த பின்பும் இச்சொல் பயன் பாட்டில் இருந்திருக்கிறது. இது கொச்சையாக இருக்கும் என்று கருதி அப்படியே ஆங்கில மொழி மாற்றம் செய்து விட்டார்கள். என்ன கொடுமை சார் இது !!
Wednesday, July 9, 2008
மாறும் அரசியல் காட்சிகள்
முலயாம் சிங்கை பொறுத்த வரையில், மாயாவதிக்கு எதிரணியில் இருக்கவேண்டும் என்பது ஒன்றே குறிக்கோள். இந்த வாய்பை சரியான முறையில் பயன்படுத்த முற்படும் இன்னொரு கட்சி தேவகவுடாவின் மதசார்ப்பற்ற ஜனதா தளம், பா.மா.க. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பேரம் செய்ய ஏதுவாக எந்த கூட்டணி உள்ளதோ அதன் பக்கம் சாய வாய்புள்ளது.
எது எப்படியோ அரசியல் சதுரங்கத்தில் காய்கள் நகர்தியாகிவிட்டது.கட்சி நலனும், தனி நபர் நலனும் முக்கியம் என்று அரசியல் கட்சிகள் முர்ர்ப்படும்,தேச நலனில் மட்டும் அக்கறை கொண்டு செயல் படுவார்கள் என்று நம்புவோம்.
Friday, June 20, 2008
குத்தல் குடைச்சல் வைத்தியம்
சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தல் தோல்வி, கட்டுகடங்காத விலைவாசி பிரச்னை, இழுத்து கொண்டிருக்கும் அணு ஆயுத ஒப்பந்த பிரச்சனை, நெருங்கிவரும் நாடாளுமன்ற தேர்தல், சில வட மாநிங்களில் வர இருக்கும் சட்டசபை தேர்தல்கள், பெருகிவரும் பா.ஜ.க வின் செல்வாக்கு, இவை எல்லாம் சேர்ந்து நடுவண் அரசுக்கு, பெரிய தலை வலியாக உள்ளது.மத்திய டாக்டருக்கு (மன்மோகன் சிங்க்) என்ன வைத்தியம் செய்தால் நிவாரணம் கிடைக்கும் என்று தெரியாமல் அல்லாடி கொண்டிருக்கிறார்.அணு ஆயுத பிரச்சனை ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனைக்கு விரைவில் முடிவு காணவேண்டும் என்பதில் பிரதமர் முழு மூச்சாக உள்ளார். இடது சாரிகளோ முட்டுக்கட்டை போடுவதில் முழு மூச்சாக உள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பிற கட்சியினர் ,அணு ஆயுத ஒப்பந்தத்தை ஆதரித்தாலும் தேர்தல் பயம் காரணமாக, இடது சாரிகளின் ஆதரவை இழக்க விரும்பவில்லை. பாவம் நம் பிரதமர். தன் கொள்கைக்காக பதவியை துறக்க முன் வந்தாலும் அவரது கட்சியோ, கூட்டணி தோழமை கட்சிகளோ அவருக்கு ஆதரவு அளிக்க முன் வர யோசிக்கிறார்கள்.இப்படி தன் பிணிகளுக்கு மருத்துவம் தெரியாமல் ஒரு டாக்டர் மத்தியில் விழி பிதுங்கி நிற்கிறார்.
மாநிலத்திலோ இன்னொரு டாக்டர், தனக்கு வந்த குத்தல்,குடைச்சல்களில் இருந்து விடுபட, மருத்துவருக்கே வைத்தியம் பார்த்துவிட்டார். பா.ம.க வினரை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டார். இது ஒரு வகை அதிர்ச்சி வைத்தியம். தேர்தல் நேரத்தில் அணி மாறுவது பா.ம.க விற்கு கை வந்த கலை. இதற்க்கு தோதாக ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்வதை பா.ம.க வழக்கமாக கொண்டிருக்கிறது.முறுக்கிக்கொண்டு கூட்டணியில் இருந்து வெளியேறியதும் அடுத்த கூட்டணி கை நீட்டி வரவேற்கும்.ஆனால் இப்பொழுது வெளியில் தள்ளப்பட்டுள்ளார்.இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது.இரண்டு திராவிட கட்சிகளும் பா.ம.க வினரை அம்போ என்று விட்டுவிட்டால் என்ன நடக்கும்.தனியாக வெற்றி பெரும்அளவிற்கு அவர்களுக்கு வலிமை இல்லை. மூன்றாவதாக ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஆசையும் பா.ம.க விற்கு உள்ளது.அது நடப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவே.இதே போன்ற ஆசை உள்ள கட்சிகளின் பட்டியலில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,தே.மு.தி.க,ச.ம.மு.க போன்றவைகளும் உள்ளன.ஜெயலலிதாவின் கூட்டணியில் சேர வேண்டுமென்றால் பா.ம.க, மத்திய அரசு பதவியை துறக்க வேண்டி இருக்கும்.அதற்க்கு அவர்கள் இப்பொழுது தயாராக இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஐ.மு.கூ. இருக்க தி.மு.க அனுமதிக்காது.வேலியில்போன ஓணானை எடுத்து காதில் விட்டு கொண்டு குத்துதே,குடையுதே என்று புலம்புவது போல உள்ளது பா.ம.க வின் நிலைமை தற்போது.
என்ன நடக்கும் என்று பொறுத்து இருந்து பார்போம்.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.
Thursday, June 19, 2008
தனி தமிழ் பதிவுகள்
மனதில் பட்டவைகள் பட்டவர்த்தனமாக உரத்த சிந்தனைகளாக மிக விரைவில் பதிவு செய்ய மிகுந்த ஆவலாக உள்ளேன்.விரைவில் மலையாளத்திலும் எனது
எண்ணங்களை பதிவு செய்ய எண்ணியுள்ளேன். ஒரு multilingual blogger ஆக வேண்டுமென்பது எனது அவா.விரைவில் நிறைவேறும் என கருதுகிறேன்.
