சமீபத்தில் படித்த ஒரு பத்த்ரிகை செய்தி -ஆஸ்த்ரேலியாவில் குழந்தைகளின் கையெழுத்து கோணல் மாணலாக இருக்கிறது என்று அவர்களின் கையை பிடித்து எழுத சொல்லி கொடுக்கிறார்களாம். இதற்க்கு காரணம் என்ன தெரியுமா?
கம்ப்யூட்டர் ,லேப்டாப், மொபைல் போன் பயன்படுத்தி அவர்களுக்கு எழுத மறந்து போய்விட்டதாம். இது நமது நகரத்து குழைந்தளுக்கும் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இப்போது தான் தேர்வுகளே ஆன்லைனில் எழுதும் காலம் ஆயிற்றே .
சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்று சொன்ன காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. ஏ.ட்டி.எம் இல் பணம் எடுத்து பழகி விட்ட இன்றைய இளைஞர்கள் பலரும் காசோலையில் தனது கைஎழுத்தயே தவறாக போட்டு விட்டு வங்கியில் சென்று வழிவதை பார்க்கலாம். 150 ஐ 60 ஐயும் பெருக்க இன்று கால்குலேடோர் வேண்டும். கணினி முன்பும் தொலைக்காட்சி முன்பும் அமர்ந்து விளையாட மறந்து விட்டார்கள் இன்றைய குழந்தைகள். இன்னும் என்ன என்ன மறக்க போகிறார்களோ ? . காலம் தான் பதில் சொல்லும்.
Thursday, August 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment