Wednesday, July 9, 2008

மாறும் அரசியல் காட்சிகள்

மன்மோகன் சிங்க், தனது ஐந்தாண்டு ஆட்சி காலம் முடிவதற்குள், அணு ஆயுத ஒப்பந்தத்தை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்று துணிவுடனும் முனைப்புடனும் ஒரு பிரதமருக்கு உரிய செயல் வேகத்தை காட்ட தொடங்கியதும் இடது சாரிகள் வேறு வழியின்றி ஆதரவை பின் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முலயாம் சிங்க் கட்சி,மற்றும் பிற சிறிய கட்சிகளின் ஆதரவை வைத்து கொண்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியம் என்ற நம்பிக்கையில் காங்கிரசும் துணிந்து இடது சாரிகள் ஆதரவை துறக்க தயாராகி விட்டது. காங்கிரசை பொறுத்த வரை அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கால தாமதம் ஏற்படுமாயின் ஒப்பந்தம் நிறைவேற்ற படாமல் போகவும் வாய்ப்புண்டு.தவிர அடுத்த தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே காங்கிரசால் வாக்களர்களை சந்திக்க முடியும். இல்லாவிட்டால் காங்கிரஸ் அரசு ஒரு spineless அரசு என்று மக்கள் நினைக்க ஏதுவாகும். மேலும் மேற்கு வங்கம்,கேரளம்,திரிபுரா போன்ற மாநிங்களில் கம்யூனிஸ்டுகள் காங்கிரசை எதிர்த்து போட்டியிடவேண்டிய சூழ்நிலையில் இடது சாரிகளும் , ஐ.மு.கூ. யில் இருந்து வெளியேற ஒரு சாக்கு தேடி கொண்டிருந்தார்கள். கட்டுக்கடங்காத பண வீக்கமும், விலைவாசி ஏற்றமும் காங்கிரசுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க நேரிடும்,என்று கம்யூனிஸ்டுகள் நம்புகிறார்கள்.

முலயாம் சிங்கை பொறுத்த வரையில், மாயாவதிக்கு எதிரணியில் இருக்கவேண்டும் என்பது ஒன்றே குறிக்கோள். இந்த வாய்பை சரியான முறையில் பயன்படுத்த முற்படும் இன்னொரு கட்சி தேவகவுடாவின் மதசார்ப்பற்ற ஜனதா தளம், பா.மா.க. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பேரம் செய்ய ஏதுவாக எந்த கூட்டணி உள்ளதோ அதன் பக்கம் சாய வாய்புள்ளது.
எது எப்படியோ அரசியல் சதுரங்கத்தில் காய்கள் நகர்தியாகிவிட்டது.கட்சி நலனும், தனி நபர் நலனும் முக்கியம் என்று அரசியல் கட்சிகள் முர்ர்ப்படும்,தேச நலனில் மட்டும் அக்கறை கொண்டு செயல் படுவார்கள் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment