Wednesday, September 17, 2008

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் லஞ்சம் ...

98 கோடி ரூபாய் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் லஞ்சமாக கொடுத்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? .நம்புங்கள், இது நடந்தது வேறு எங்கும் அல்ல.கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மக்கள் 98 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்கள்.Transparency India International and Centre for Media Studies என்ற அமைப்பு TII-CMS corruption study 2007 என்று ஒரு ஆய்வு நடத்தியது. அவர்கள் வெளியிட்டது தான் இந்த அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்.அதாவது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சராசரியாக ரூ. 477 லஞ்சமாக கொடுத்துள்ளதாக அர்த்தம். லஞ்சம் வாங்கியவர்கள் பெரும்பாலும் அரசு அதிகாரிகளே.நடு தரகர்கள் அல்ல.பொது விநியோகம்,மருத்துவமனை,மின்சார துறை,கல்வி துறை,குடிநீர் வாரியம்,வங்கிகள்,கிராம புற வேலை வாய்ப்பு திட்டம்,காவல் துறை,வீடு மற்றும் மனை பத்திர அலுவலுகம், என்று அனைத்து துறையினருமே லஞ்சம் பெற்றுள்ளார்கள்.எதையும் விட்டு வைப்பதில்லை போலும். 43 விழுக்காடு நபர்கள் லஞ்சம் கொடுத்ததற்கு அரசு அதிகாரிகளை குறை கூறினார்கள்.37 விழுக்காடு நபர்கள் தங்களேயே குறை கூறினார்கள். மீதம் உள்ளவர்கள் அரசியல்வாதிகளை குறை கூறினார்கள்.எப்படியோ லஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கும் வரை வாங்குபவர்களும் இருக்க தான் செய்வார்கள்.அனைவருக்கும் தேவைகள் அதிகமாகி விட்டது.ஆசைகளும் அதிகமாகி விட்டது.என்ன விலை கொடுத்ததும் வங்க தயாராக உள்ளார்கள்.அதை ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.கொடுப்பவர்களும் சரி,வாங்குபவர்களும் சரி ,தவறென்று உணர்ந்து திருந்தினாலே ஒழிய லஞ்சம் இருந்து கொண்டே தான் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.இன்னொரு அதிர்ச்சி தகவல் ,தேசீய அளவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ம்க்கள் சுமார் 900 கோடி ரூபாய் கடந்த ஓராண்டில் லஞ்சமாக கொடுத்துள்ளார்கள் என்றும் இந்த ஆய்வு மதிப்பிடுகிறது.இந்திய ஒரு வளரும் நாடு.எதில் என்றும் கூற வேண்டுமோ?

No comments:

Post a Comment