Sunday, November 30, 2008

நெத்தியடி

மும்பை பயங்கரத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் பெங்களூரு வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர் அச்சுதானந்தனக்கும் மந்திரி பாலக்ரிஷ்ணனுக்கும் சந்தீபத்தின் தந்தை உன்னிகிருஷ்ணன் அளித்த வரவேற்ப்பு நெத்தியடியாக அமைந்தது. பெங்களூரில் நடந்த சந்தீப்பின் இறுதி சடங்கிற்கு கர்நாடக முதல்வர் எட்டியூரப்பா சென்றிருந்தார்.உடனே கேரளத்தில் உள்ள எதிர்கட்சிகள் கேரளாவை சேர்ந்த சந்தீப்பின் இறுதி சடங்கிற்கு கேரள முதல்வர் செல்லாததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.இதை பார்த்து இவர் பெங்களூருக்கு இரண்டு நாட்கள் போன பின்பு பயணம் செய்தார்.அங்கு அவரது பாதுகாப்புக்கு மோப்ப நாய்களை விட்டு சந்தீப்பின் வீட்டை சோதனை இட செய்திருக்கிறார்கள். மகனை இழந்து வாடும் பெற்றோர்களை இது மிகவும் பாதித்திருக்கும்.முதல்வர் சென்றது ஒரு தீவிரவாதியின் வீட்டிற்கு அல்ல.வீர மரணம் அடைந்த ஒரு ராணுவ வீரரின் வீட்டில் இது போன்ற சோதனைகள் தவிர்க்கபட்டிருக்கலம்.அதனால் தானோ என்னவோ சந்தீப்பின் தந்தை முதல்வரை பார்ர்க்க மறுத்துவிட்டு மிகவும் கோபமாக அவர்களை வெளியே செல்லுமாறு கூறியிருக்கிறார்.தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் ஆதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் அரசியல்வாதிகளுக்கு தகுந்த படம் புகட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment