Friday, December 5, 2008
திவாலாகும் மிக பெரிய நிறுவனங்கள்
நிதி நெருக்கடி மற்றும் 'melt down' காரணமாக மிக பெரிய நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது என்று பரவலாக நம்பப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள என்றான் (Enron) நிறுவனம் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. ஆனால் இதற்கும் பொருளாதார 'slow down' க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மிக பெரிய மோசடி செய்து உள்ளார்கள். இதற்க்கு தணிக்கை நிறுவனம்,வங்கிகள் போன்றவையும் துணை போய் உள்ளது தான் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய விடயம். புகழ்பெற்ற தணிக்கை நிறுவனம் ஆண்டெர்சன் பணம் பெற்றுக்கொண்டு என்றான் நிறுவனத்தின் நட்டத்தையும் கடன்களையும் பங்குதாரர்களிடம் இருந்து மறைத்து உள்ளது. இதை விட அதிர்ச்சி தரும் விடயம் என்றானின் தலைமை நிர்வாகி (CEO) நிதி முறைகேடு செய்து கோடி கணக்கில் சம்பாதித்து உள்ளார் என்பது. இவர்களுக்கு கடன் கொடுத்து உதவிய சிட்டி பாங்கும் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளது. இதெல்லாம் தெரிந்தே நடந்தது என்றும் சந்தேகமும் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி கொள்ளை லாபமும் அடைந்திருக்கிறார்கள். இது தான் இந்தியாவிலும் நடந்திருக்கிறது. participatory note மூலம் வெளிநாட்டு பணம் இந்திய பங்கு சந்தையில் புரண்டு பங்கு சந்தை உயர்வு கண்டது. இந்த பணத்தை இவர்கள் திரும்பபெற்றவுடன் பங்கு சந்தை சரிய தொடங்கியது. மாட்டிகொண்டது அப்பாவி பொதுஜனம் தான்.ஏற்கனவே lehman brothers என்ற பெரிய நிறுவனம் மஞ்சள் கடுதாசி கொடுத்து அமெரிக்காவில் பல வங்கிகளை சிக்கலில் மாட்டிவிட்டது.இதில் இந்திய வங்கி ICICI யும் ஓன்று.தற்பொழுது பிரபல கார் நிறுவனம் GM (General Motors) திவாலாகி மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது.லட்ச கணக்கில் அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளார்கள்.இன்னும் பலர் இழக்கும் அபாயமும் உள்ளது. மற்றொரு பெரிய கார் நிறுவனம் Chrisler உம் வெகு விரைவில் மூடுவிழா நடத்தும் என்று சொல்ல படுகிறது. இந்த நிறுவனமும் ,GM மும் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலையில் உள்ளது.அமெரிக்க அரசுக்கு மிக பெரிய நெருக்கடியை இந்த நிறுவனங்களின் நிதி நிலைமை அளித்துள்ளது. அரசு நிதி உதவி கிடைக்காத பட்சத்தில் நிறுவங்களை மூடுவதை தவிர வேறு வழி இல்லை என்று இந்த நிறுவனங்கள் தெரிவித்து உள்ளது. செயற்கையாக ஏற்படுத்தப்படும் பங்கு சந்தை உயர்வை இந்தியர்கள் சந்தேகத்துடனே பார்கவேண்டும் .ஹர்ஷத் மேத்தா கற்பித்த பாடம் வெகு சீக்கரத்தில் நம் மக்கள் மறந்து விட்டார்கள்.20000 தாண்டி சென்ற சென்செக்ஸ் இவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. இப்பொழுது 10000 க்கும் கீழ் இருக்கும் சென்செக்ஸ் கவலை அளிக்கிறது.சட்டங்களை திருத்தி நிறுவனங்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்களின் கட்டுபாட்டை அதிகரிப்பதற்கு அமெரிக்க அரசு தற்பொழுது யோசித்து வருகிறது.நமது நாட்டில் participatory notes குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்வி கணைகளுக்கு இன்று வரை அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. professional integrity தணிக்கயார்களிடம் இல்லாதது மிக பெரிய அதிர்ச்சி அளிக்கும் விடயம்.நான் இந்த பதிவு எழுதும் சமயத்தில் தொலைகாட்சியில் கேட்ட செய்தி - ரிலையன்ஸ் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக 5000 நபர்களுக்கு வேலை இழப்பு திட்டம் வகுத்துள்ளது. நமது நாட்டில் பெரிய நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது என்று இன்று வரை அவர்களின் ஆண்டு அறிக்கையை வைத்து மட்டுமே நமது பொது ஜனமும் பங்குதாரர்களும் எடை போடுகிறார்கள்.அதிலும் இது போன்ற குளறுபடிகள் ஏதும் உள்ளதா என்று காலம் தான் சொல்ல வேண்டும்.
Labels:
என்றான்,
கிறிஸ்லெர்,
லெமன் பிரதர்ஸ்,
ஜெனரல் மோடோர்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment