Friday, June 20, 2008

குத்தல் குடைச்சல் வைத்தியம்

தமிழக மற்றும் தேசீய அரசியலில் சலசலப்புகள் ஆரம்பமாகிவிட்டது. ஒரே ஒற்றுமை, மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி, குத்தல், குடைச்சல் கொடுப்பது தோழமை கட்சிகளே. மாநிலத்தில் பா.ம.க வும்,மத்தியில் இடது சாரிகளும் கொடுக்கும் குத்தல், குடைச்சல்கள், ஆளும் கட்சியினரினை பொறுமை இழக்க செய்து வருகிறது.அதன் வெளிப்பாடுகள் தோன்றவும் ஆரம்பித்துவிட்டது.
சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தல் தோல்வி, கட்டுகடங்காத விலைவாசி பிரச்னை, இழுத்து கொண்டிருக்கும் அணு ஆயுத ஒப்பந்த பிரச்சனை, நெருங்கிவரும் நாடாளுமன்ற தேர்தல், சில வட மாநிங்களில் வர இருக்கும் சட்டசபை தேர்தல்கள், பெருகிவரும் பா.ஜ.க வின் செல்வாக்கு, இவை எல்லாம் சேர்ந்து நடுவண் அரசுக்கு, பெரிய தலை வலியாக உள்ளது.மத்திய டாக்டருக்கு (மன்மோகன் சிங்க்) என்ன வைத்தியம் செய்தால் நிவாரணம் கிடைக்கும் என்று தெரியாமல் அல்லாடி கொண்டிருக்கிறார்.அணு ஆயுத பிரச்சனை ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனைக்கு விரைவில் முடிவு காணவேண்டும் என்பதில் பிரதமர் முழு மூச்சாக உள்ளார். இடது சாரிகளோ முட்டுக்கட்டை போடுவதில் முழு மூச்சாக உள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பிற கட்சியினர் ,அணு ஆயுத ஒப்பந்தத்தை ஆதரித்தாலும் தேர்தல் பயம் காரணமாக, இடது சாரிகளின் ஆதரவை இழக்க விரும்பவில்லை. பாவம் நம் பிரதமர். தன் கொள்கைக்காக பதவியை துறக்க முன் வந்தாலும் அவரது கட்சியோ, கூட்டணி தோழமை கட்சிகளோ அவருக்கு ஆதரவு அளிக்க முன் வர யோசிக்கிறார்கள்.இப்படி தன் பிணிகளுக்கு மருத்துவம் தெரியாமல் ஒரு டாக்டர் மத்தியில் விழி பிதுங்கி நிற்கிறார்.

மாநிலத்திலோ இன்னொரு டாக்டர், தனக்கு வந்த குத்தல்,குடைச்சல்களில் இருந்து விடுபட, மருத்துவருக்கே வைத்தியம் பார்த்துவிட்டார். பா.ம.க வினரை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டார். இது ஒரு வகை அதிர்ச்சி வைத்தியம். தேர்தல் நேரத்தில் அணி மாறுவது பா.ம.க விற்கு கை வந்த கலை. இதற்க்கு தோதாக ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்வதை பா.ம.க வழக்கமாக கொண்டிருக்கிறது.முறுக்கிக்கொண்டு கூட்டணியில் இருந்து வெளியேறியதும் அடுத்த கூட்டணி கை நீட்டி வரவேற்கும்.ஆனால் இப்பொழுது வெளியில் தள்ளப்பட்டுள்ளார்.இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது.இரண்டு திராவிட கட்சிகளும் பா.ம.க வினரை அம்போ என்று விட்டுவிட்டால் என்ன நடக்கும்.தனியாக வெற்றி பெரும்அளவிற்கு அவர்களுக்கு வலிமை இல்லை. மூன்றாவதாக ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஆசையும் பா.ம.க விற்கு உள்ளது.அது நடப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவே.இதே போன்ற ஆசை உள்ள கட்சிகளின் பட்டியலில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,தே.மு.தி.க,ச.ம.மு.க போன்றவைகளும் உள்ளன.ஜெயலலிதாவின் கூட்டணியில் சேர வேண்டுமென்றால் பா.ம.க, மத்திய அரசு பதவியை துறக்க வேண்டி இருக்கும்.அதற்க்கு அவர்கள் இப்பொழுது தயாராக இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஐ.மு.கூ. இருக்க தி.மு.க அனுமதிக்காது.வேலியில்போன ஓணானை எடுத்து காதில் விட்டு கொண்டு குத்துதே,குடையுதே என்று புலம்புவது போல உள்ளது பா.ம.க வின் நிலைமை தற்போது.

என்ன நடக்கும் என்று பொறுத்து இருந்து பார்போம்.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

No comments:

Post a Comment