Saturday, December 6, 2008

துப்பாக்கியுடன் விமானத்தில் அமிதாப்

நேற்று இரவு புனே செல்வதற்காக ஜெட் ஏர்வேய்ஸ் பயணிகள் விமானத்தில் அமிதாப் துப்பாக்கியுடன் சென்றிருக்கிறார். ஆனால் அவரிடம் இருந்த ஆவணங்கள் அந்த துப்பாக்கியுடயது அல்ல.அவரிடம் 3 துப்பாக்கிகள் இருப்பதாகவும் ,வேறு ஒரு துப்பாக்கியின் ஆவணங்களை தவறுதலாக எடுத்து வந்துவிட்டதாகவும் கூறி இருக்கிறார்.தீவிரவாத செயல்களால் அதிக பாதுகாப்பில் இருக்கும் மும்பை விமான நிலையத்தில் இவர் இப்படி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.கடைசியில் துப்பாக்கி இல்லாமலே பயணித்திருக்கிறார்.துப்பாக்கியுடன் அவர் வந்தது அவரது பாதுகாப்பிற்கு என்று வைத்து கொண்டாலும் கூட ,சற்று மிகையாகவே படுகிறது.இதெல்லாம் போக ,இது போன்ற சமயங்களில் பிடிப்பட்ட நபர் அமிதாப் அல்லாமல் வேறு நபராக இருந்திருந்தால் அவரை CISF அல்லது போலீசிடம் ஒப்படைத்து இருப்பார்கள்.நமது நாட்டில் சட்டம் எல்லோருக்கும் பொது அல்ல என்ற தோற்றம் இதனால் ஏற்படுகிறது.இப்படி ஒவ்வொரு காவல் அதிகாரியும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சலுகைகள் அனுமதித்தால் ஏன் தீவிரவாதம் தழைத்து ஓங்காது? அமிதாப் ஒரு பிரபலம் என்பதால் இந்த செய்தி வெளயில் கசிந்து விட்டது.இதுவே வேறு ஒரு நபராக இருந்தால் இது போன்ற செயல்கள் வெளி உலகிற்கு தெரியாமலே நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.இன்னமும் நாம் எந்த பாடமும் கற்று கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.அது சரி அமிதாபுக்கு தான் நிஜ வாழ்கையிலும் 'டான்' என்று நினைப்போ என்னவோ ?

No comments:

Post a Comment