Tuesday, October 26, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி 8

1. உலகில் சுமார் 17 விழுக்காடு மனிதர்கள் இடதுகை பழக்கம் உள்ளவர்களாம்.மனித குரங்குகளிலும் அதே விழுக்காடு இடது கை பழக்கம் உள்ளவைகளாம்.

2.நீங்கள் வலது கை பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும் போது உணவை வலது பக்கம் தான் அசை போடுவீர்களாம்.அதே போல இடது கை பழக்கம் உள்ளவர்கள் இடது பக்கம் அசை போடுவார்களாம்.

3.ஒன்பது வயது வரை ஐன்ஸ்டீனுக்கு சரியாக பேச வராதாம். மூளை வளர்ச்சி குன்ற்றிய குழந்தை என்று நினைத்தார்களாம்.

4.ஒவ்வொரு நாளின் பொழுதும் முந்திய நாளை விட 0.00000002 நொடிகள் அதிகமாக இருக்குமாம்.இது ஒரு நூற்றாண்டுக்கு 13 நொடிகல் அதிகமாகுமாம்.

5.பொதுவாக அனைத்து நாடுகளிலும் தலையை மேலிருந்து கீழே ஆட்டினால் ஆமாம் என்று சொல்வதாக தான் பொருள். ஆனால் புல்கேரியா மற்றும் அல்பாமியா நாட்டில் மட்டும் இல்லை என்று பொருளாம்.

6.டால்ஃபினுக்கு 3 வயிறு உண்டாம்

7.அழும் திறன் கொண்ட ஒரே இனம் மனிதன் மட்டும் தான்.

8.உலகில் நீர் வழி பயணம் முதல் முதலாக 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்த் பகுதியில் தான் ஆரம்பிக்கபட்டதாம்.

9.2600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்யபட்டதாம். சிசேரியன்,கண் புரை எலும்புமுறிவு மற்றும் சிறுனீரகத்தில் கல் போன்ற்றவைக்கு அறுவை சிகிச்சை செய்யபட்டு வந்ததாம்.

10.இந்தியாவில் 30,000 க்கும் மேல் பள்ளிவாசல்கள் உள்ளதாம்.உலகிலயே அதிக அளவில் பள்ளிவாசல் உள்ள நாடு இந்தியா தானாம்.

Friday, September 17, 2010

தமிழில் எண்கள் குறித்த சொற்கள்

நம்மில் பெரும்பாலோருக்கு எண்களை குறிக்கும் தமிழ் சொற்களில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம்,லக்ஷம்,கோடி வரை தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்க்கு மேல் உள்ள எண்களை குறிக்கும் சொற்களும் தமிழில் உள்ளது. அது தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


100000000 = அற்புதம் (அதாவது நூறு மில்லியனை குறிக்கும் சொல்)

1000000000 =நிகற்புதம் ( ஒரு பில்லியனை குறிக்கும் சொல்)

10000000000 =கும்பம் ( பத்து பில்லியனை குறிக்கும் சொல் )

100000000000 = கணம் (நூறு பில்லியனை குறிக்கும் சொல் )

1000000000000 = கற்பம் (ஒரு திரில்லியனை குறிக்கும் சொல் )

10000000000000 = நிகற்பம் ( பத்து திரில்ல்யனை குறிக்கும் சொல் )

100000000000000 =பதுமம் (நூறு திரில்ல்லியனை குறிக்கும் சொல் )

1000000000000000 = சங்கம் ( ஒரு ஜில்லியனை குறிக்கும் சொல் )

10000000000000000 = வெள்ளம் (பத்து ஜில்லியனை குறிக்கும் சொல் )

100000000000000000 = அன்னியம் (நூறு ஜில்லியனை குறிக்கும் சொல்)

1000000000000000000 = அர்த்தம் ( இதற்க்கு மேல் அங்கில எண்ணிக்கை தெரியவில்லை .தெரிந்தவர்கள் சொல்லலாம் )

10000000000000000000 = பரார்ட்டம்

100000000000000000000 = பூரியம்

1000000000000000000000= முக்கோடி

10000000000000000000000 = மகாயோகம்

( எங்கோ படித்தது )

Thursday, September 16, 2010

உங்களுக்கு தெரியுமா ? பகுதி -7

1 . யானையின் பல் 9 பவுண்டு வரை எடை இருக்குமாம்

2. கண்ணை மூடாமல் தும்மல் போட முடியாது

3. நீல கண்கள் உடையவர்களால் இருளில் நன்றாக பார்க்க இயலும்

4. சில சிங்கங்கள் ஒரு நாளைக்கு 20 முறை உடல் உறவு கொள்ளுமாம்

5. தரை வாழ் மிருகங்களிலே மிகவும் வேகமாக ஓட கூடியது சிறுத்தை தான் .2 நொடிகளில் 0 முதல் 70 கி.மீ வேகத்தை எட்டமுடியுமாம்

6. electric eel என்ற வகை மீன்களின் வாலில் 12 பல்புகள் எரிய கூடிய அளவுக்கு மின்சாரம் இருக்குமாம் .இந்த மின்சாரம் தாக்கினால் மனிதர்கள் இறக்க கூடும்

7. உலகிலயே அதிக சத்தம் எழுப்ப கூடிய விலங்கினம் Blue whale என்பது . 188 டெசிபல் அளவுக்கு இதனால் சத்தம் எழுப்ப முடியும்.

8. நத்தைகளால் 3 ஆண்டுகள் வரை உணவு உண்ணாமல் வாழமுடியும்

9. 2000 குழந்தைகளில் ஒரு குழந்தை ஒரு பல்லுடன் பிறப்பதுண்டு

10. ஒரு ரத்த cell ஒரு மனிதனின் உடல் முழுவதும் ஒரு முறை சுற்றி வர 60 நொடிகள் ஆகும்

Sunday, September 12, 2010

விரல் நுனியில் மதுரை

Madurai at Fingertips என்பது மதுரை பற்றி இணையத்தில் வந்துள்ள ஒரு புதிய தளம்.சற்று வித்தியாசமான தளமாக உள்ளது.மதுரை குறித்து பல சுவாரசியமான தகவல்கள் இந்த தளத்தில் உள்ளது. இது வரை பலருக்கும் அறியாத பல புதிய தகவல்களும் இந்த தளத்தில் உள்ளது.தலைப்பில் மட்டும் தமிழையும் சேர்த்துள்ளது தான் சற்று நெருடலாக உள்ளது.ஒரு சில பக்கங்களையாவது தமிழில் சேர்த்திருக்கலாம்.இந்த தளத்தில் பல பயனுள்ள இணைப்பு பக்கங்களும் உள்ளது.உள்ளூர் வாசிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் சேர்த்து தளத்தை உருவாகியிருப்பது தான் இந்த தளத்தின் தனி சிறப்பு.http://www.maduraiatfingertips.com/

Thursday, September 2, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி 6

1.கேட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன் மட்டுமே

2.எவ்வளவு பெரிய வைரக்கல் ஆக இருந்தாலும் அதன் பரமாணு அல்லது மூலக்கூறு என்பது ஓன்று ஆக மட்டுமே இருக்கும்

3.நாய்கள் அவைகளுக்கு தேவையான விட்டமின் சி சத்தை அவைகளே தயார் செய்து கொள்கிறது.

4.பூனைகளால் நூறு விதமான ஒலிகளை எழுப்ப முடியும்.ஆனால் நாய்களால் வெறும் பத்து விதமான ஒலிகளையே எழுப்ப முடியும்

5.உலகின் முதல் பல்கலைகழகம் நான்காம் நூற்றாண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்ட நாளந்தா பலகலைகழகம் தான்

6.உலகிலயே இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ள மிக பழமையான அணைக்கட்டு தமிழ் நாட்டில் உள்ள கரிகாலன் கட்டிய கல்லணை தான்

7.உலகிலயே அதிக அளவில் பள்ளி வாசல் உள்ள நாடு இந்தியா தான் சுமார் 300000 பள்ளி வாசல்கள் இந்தியாவில் உள்ளது.

8.உலகிலயே அதிகமான நபர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் இந்திய ரயில்வே துறை தான்.

9.பட்டம்பூசிகளுக்கு முதன் முதலில் இருந்த ஆங்கில பெயர் என்ன தெரியுமா ! flutterby என்பது தான்

10.வாத்து எழுப்பும் " குவாக் " என்ற ஒலிக்கு எதிரொலி வருவதில்லை .ஏன் என்று இது நாள் வரை யாராலும் கணிக்க முடியவில்லை

Thursday, August 26, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி 5

1.நம் வீட்டில் வலம் வரும் ஈ போடும் அடிநாதம் middle Octave key F

2.இரண்டு கி.மீ தொலைவில் உள்ள வாசனையை கூட ஈயினால் நுகர          முடியும்

3.புத்திசாலிகளின் தலை முடியில் அதிக அளவில் zinc மற்றும் copper இருக்கும் என்று சொல்லபடுகிறது

4.இஸ்தான்புள் தான் உலகிலயே இரண்டு கண்டங்களில் இருக்கும் நகரம் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும்

5.எறும்புக்கு பதினைந்து நாட்கள் வரை நீருக்கு அடியில் இருக்கும் திறன் உண்டு

6.ஜப்பானில் தர்பூஸ் பழங்கள் சதுர வடிவில் உள்ளதாம் .அவை அடுக்கி வைப்பதற்கு மிகவும் எளிதாக இருக்குமாம்

7.பசுவினால் மாடி படிகள் ஏற முடியுமாம் .ஆனால் இறங்க முடியாதம்.

8.குட்டி ஒட்டக சிவிங்கி பிறக்கும் போது ஆறு அடி உயரத்தில் இருந்து கீழே விழுமாம்

9.உலகிலயே அதிகமாக திருடப்படும் நூல் பைபிள் தானாம்

10.மைக்ரோவேவ் அவனில் திராட்சை வைத்தால் வெடிக்குமாம்

Thursday, August 19, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி - 4

1.ஆப்பிள் விதையில் சயனைடு உள்ளது.



2. கிரீம் பாலை விட மெலிதானது .


3.அமெரிக்கா ஜப்பான் தவிர முற்றிலுமாக உள்ளூர் உதிரிபாகங்களை கொண்டு சூப்பர் கம்ப்யுட்டர் தயாரித்துள்ள ஒரே நாடு இந்தியா தான்.

4.உலகிலயே அதிகமான நபர்களால் உடனடியாக முகரவுணர்வு செய்யப்பட்ட வாசனை என்ன தெரியுமா ? - காபி வாசனை.

5.உலகிலயே அதிகமாக ஆங்கிலம் பேசும் திறன் உள்ள நபர்கள் உள்ள நாடு எது தெரியுமா ? - இந்தியா தான்
 
6.மனிதர்களுக்கு கைரேகை எப்படி தனித்தன்மை வாய்ந்ததோ அதே போல் நாய்களுக்குஅதன் மூக்கின் மேல் உள்ள ரேகை தனிதன்மை வாய்ந்தது.அதை வைத்து நாய்களை மிக சரியாக அடையாளம் காணலாம்.

7.நல்ல உடல் நலம் உள்ள நாயின் சராசரி இதய துடிப்பு ஒரு நிமிடத்துக்கு 120 .இது மனிதர்களை விட 50 % அதிகம் .

8.நாய்களுக்கு கூடுதலாக நாக்கு மூலமாகவும் மூச்சு விடும் திறன் உள்ளது.

9.நாய்களின் கேட்கும் திறன் மிக அதிகம் . சுமார் 35000 vibration per second வரை நாய்களால் கேட்க முடியும்.

10.நாம்  தும்மல் போடும்போது இதயம் ஒரு வினாடி நின்று விட்டு மீண்டும் இயங்குகிறது.

Tuesday, August 17, 2010

உங்களக்கு தெரியுமா - பகுதி 3

1.சீன தலைவர் மாவோ சே துங் பல் துலக்கினதே இல்லையாம்.ஏன் என்று கேட்டால் புலிகள் என்றைகாவது பல் துலக்கியதுண்டா என்று கேட்பாராம்!

2.உலகத்திலயே அதிக அளவில் தபால் நிலையங்கள் உள்ள நாடு இந்தியா தானாம்.

3.ஒருவர் பலரை மணந்து கொள்வது உலகிலயே அதிக அளவில் காணபடுவது மாலைதீவில் தானாம்.

4. நார்வேயில் ஒரு நகரத்தின் பெயர் A , ஜப்பானில் ஒரு நகரத்தின் பெயர்  O , பிரான்சில் ஒரு நகரத்தின் பெயர் Y

5.கோகோ கோலா முதன் முதலில் தயாரிக்கப்பட்ட போது அதன் நிறம் என்ன தெயர்யுமா -பச்சை
 
6. போலார் கரடிகள் இடது கை பழக்கம் உடையவை

7. எஸ்கிமோக்கள் சூதாடுவதில்லை

8.குழந்தைகளுக்கு  இருக்கும் எலும்புகளின்எண்ணிக்கை  300.வயதானவர்களுக்கு இருக்கும் எலும்பு எண்ணிக்கை 206

9. மூன்று மாதம் வரை குழந்தைகள் அழும் பொது கண்ணீர் சுரப்பதில்லை.

10. பாலைவனம் இல்லாத ஒரே கண்டம் -ஐரோப்பா மட்டும் தான்

Sunday, August 15, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி -2

1.தலையை திருப்பாமல் பின்புறம் பார்க்கும் திறன் உள்ள இரண்டு விலங்குகள் முயலும் கிளியும் மட்டுமே.

2 .பின்னோக்கி பறக்க கூடிய ஒரே பறவை ஹம்மிங் பேர்ட் மட்டுமே.

3.ஆங்கிலத்தில் 'Jiffy' என்று சொல்ல கூடிய அளவுகோல் ஒரு வினாடியின்   நூறில் ஒரு பங்கு.

4 .ஒட்டகச்சிவங்கி 21 இஞ்சு நீளமுள்ள நாக்கினால் தனது காதுகளை சுத்தம் செய்யுமாம்.

5 .உலகில் உள்ள காடுகளில் 25 % சைபீரியாவில் உள்ளது.
 
6 . பாப்பா நியு கினியா என்ற சிறிய நாட்டில் அதிக பட்சமாக 800 மொழிகள் பேசும் மக்கள் வசிக்கிறார்கள்.

7 .பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை அளித்த நாடு நியுசிலாந்து - ஆண்டு -1893

8 .ஆஸ்ரேலியாவில் மொத்த மக்கட் தொகையை விட இரண்டு மடங்கு  அதிகம் கங்காருக்கள் உள்ளது.

9 .நெப்போலியன் காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்காக 1500 பெயர்கள் கொண்ட ஒரு பட்டியல் தயார் செய்து வைத்திருந்தாராம்.1984 ஆம் ஆண்டு வரை பெல்ஜியத்தில் குழந்தைகளுக்கான பெயர்களை இந்த பட்டியலில் இருந்து தான் தேர்வு செய்ய வேண்டுமாம்.

10 .சவூதி அரேபியாவில் நதிகளே கிடையாதாம்.

Friday, August 13, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி 1

உரத்த சிந்தனைகள் மூலமாக சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதினேன்.அதன் விளைவு தான் இந்த பதிவு .வியப்பு
தரும் சில தகவலகள் இதோ :

1. தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம் ( பல்பு ஏன் கண்டுபிடிச்சார் என்று இப்ப புரியுது )

2 . யானை கூட்டத்துக்கு ஆங்கிலத்தில் Elephant herd என்பது போல ஆந்தை கூட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் parliment (சரி தான் )

3 . நீதி போதனை குரங்குகளின் பெயர் தெரியுமா? தீயவை பார்க்காதே குரங்கின் பெயர் Mizaru தீயவை கேட்காதே  குரங்கின் பெயர் Mikazaru தீயவை பேசாதே  குரங்கின் பெயர் Mazaru (பெயர்களை பார்த்தால் நம்ம ஊர் குரங்குகள் போல தெரியவில்லை )
 
4.யானைக்கு மட்டும் மற்ற விலங்குகள் போல தாவ முடியாதாம் (நல்ல வேளை).


5. நான்கு மூட்டுகள் உள்ள ஒரே விலங்கினம் யானை. (அவ்வளவு பெரிய எடையை தாங்க வேண்டாமா ! ஆனால் மூட்டு வலியும் இரட்டிப்பாக இருக்குமே ?)
 
6. கடந்த 10 000 ஆண்டுகளாக இந்தியா எந்த நாட்டு மேலயும் போர் தொடுக்க வில்லையாம்.( ஹூம் ! சீனாவும் பாகிஸ்தானும் நம் மேல் போர் தொடுக்காமல் இருந்தால் பத்தாது !)


7. நீர்யானையால் மனிதனை விட வேகமாக ஒடமுடியுமாம்(வேண்டாம் இந்த விளையாட்டு).
 
8. ஒரு நிறத்தை சொல்ல சொன்னால் ஐந்தில் மூன்று நபர்கள் சிவப்பு என்று சொல்வார்களாம்.(கம்யுனிஸ்டுகள் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம் )


9. ரஷ்ய கம்யுனிச தலைவர் காரல் மார்க்ஸ் தன வாழ்க்கையில் ஒரு நாள் கூட ரஷியாவிற்கு சென்றதில்லயாம்.அவர் பிறந்தது ஜெர்மனியில்
வாழ்ந்தது பிரான்சிலும் இங்கிலாந்திலும் .

10. உலகத்தில் மிக அதிகமாக உள்ள பெயர் என்ன தெரியுமா? முகமத்

         வியப்புகள் இன்னும் தொடரும் ....

Monday, July 5, 2010

எங்கே போகிறோம்?

சில  நாட்களுக்கு முன் பத்திரிகையில் ஒரு செய்தி படிக்க நேரிட்டது. புது டில்லியில் ஒரு விழாவில் சோனியா அவர்களும் அத்வானி அவர்களும் அருகருகே மகிழ்சிசியாக உரையாடி கொண்டிருக்கும் ஒரு படத்தை பார்த்து விட்டு தமிழக முதல்வர் " பார்க்க பொறாமையாக இருக்கிறது . இது போல தமிழகத்தில் ஏன் இல்லை ? " என்று வினவியுள்ளார். உண்மை தான். இதை தான் அனைத்து பொது மக்களும் கேட்கிறார்கள்.அரசியல் வேறு தனி மனித உறவுகள் வேறு என்று ஏன் இன்னும் தமிழக அரசியல் வாதிகள் புரிந்து கொள்ளவில்லை?இதே போல அரசியல் வேறு ,தொழில் முறை உறவு வேறு என்றும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியே இதற்க்கு சான்று.நடிகை குஷ்பூ ஒரு அரசியல் கட்சியில் தன்னை இணைத்து கொண்ட உடனே எதிர்க்கட்சி தொலைக்காட்சி சேனலில் அவர் தொழில் ரீதியாக பல ஆண்டுகளாக செய்து வந்த நிகழ்ச்சியும் சீரியல்களும் நிறுத்தப்பட்டன என்று செய்தி வெளியாகியுள்ளது.எதிர் கட்சி நண்பரின் வீட்டு விழாக்களில் கலந்து கொண்டால் தனது கட்சியில் பதவி பறிக்கப்பட்டு விடும் அல்லது கட்சியில் இருந்து நீக்கபடுவோம் என்று அஞ்சுபவர்கள் ஏராளம்.இது தமிழ் நாட்டில் மட்டும் நிகழும் ஒரு அவலம். அப்படியே தப்பி தவறி ஒருவர் எதிர் கட்சி நபரின் வீட்டு விழாவுக்கு சென்று அங்கே மாற்று கட்சி நண்பரை சந்திக்க நேரிட்டால் முகத்தை திருப்பி கொள்வதும் அல்லது பார்க்காதது போல இருப்பதும் வேடிக்கையான நிகழ்வுகள்.இருவரும் சந்தித்து மகிழாவாக உரையாடும் புகைப்படம் எங்கேனும் வந்துவிட்டால் அவர் தலை தப்பாது.அடுத்த கணமே அவர் கட்சியிலிருந்து நீக்கபடுவார்.கட்சிகளின்  இந்த அணுகுமுறையை பயன்படுத்தி வேண்டாதவர்கள் இதே போன்று புகைப்படங்களை தயார் செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி சம்பந்தப்பட்டவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்சிகளும் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.இதே போன்ற நிகழ்சிகள் வேறு எந்த மாநிலத்திலும் நடை பெறுவதில்லை.திருமண விழாக்களில் கலந்து கொள்ளும் கட்சி பிரமுகர்கள் வாடிக்கையாக மேடையில் அரசியல் பேசும் வழக்கத்தையும் இவர்கள் தான் ஆரபம்பித்து வைத்தார்கள்.திருமண விழா மேடையில் எங்கிருந்து அரசியில் வந்தது ?இப்படி திருமண மேடைகளில் அரசியல் பேசுவதால் தான் மாற்று கட்சியினர் திருமண விழாக்களுக்கு வருவதை தவிர்க்கின்றனர்.அப்படி பேசப்படும் கருத்துக்களுக்கு மறுப்பு சொன்னாலும் வம்பு மறுத்து பேசாவிட்டாலும் வம்பு.எதற்கு வம்பு என்று இவர்கள் இது போன்ற விழாக்களை தவிர்த்துவிடுகின்றனர்.இது ஒரு ஆரோக்யமான போக்கு அல்ல.

 
தனிமனித துதிகள் அளவுக்கு அதிகமாக தமிழக அரசியில் களத்தில் காணலாம்.இதுவும் மற்ற மாநிலங்களில் பார்க்கபடாத ஓன்று.அளவுக்கு அதிகமாக புகழ் பாடி அச்சடிக்கப்படும் சுவரொட்டிகளை பார்த்தால் பல நேரங்களில் எரிச்சல் வருகிறது. எங்கு பார்த்தாலும் ப்ளெக்ஸ் போர்டுகள் ஆளுயர விளம்பரங்கள்.இது போன்ற விளம்பரங்களில் வரும் துதிகளை படித்தால் என்ன சொல்ல வருகிறார் என்று கூட புரிவதில்லை.பேரூந்தில் செல்லும் பொழுது நகரெங்கும் ஓட்டபெட்டிருக்கும் இது போன்ற சுவரொட்டிகளை படித்தால் நன்றாக பொழுது போகும்.திருமண விழாவுக்கு வரும் தலைவரை வரவேற்று ப்ளெக்ஸ் போர்டுகள் ஆளுயர சுவரொட்டிகள்,பத்தரிகைகளில் முழு பக்க விளம்பரங்கள்,திருமண மண்டபம் இருக்கும் சாலை எங்கும் சுவரொட்டிகள் என நகரையே கலங்க அடித்து விடுவார்கள்.திருமணம் முடிந்த பின்பு இன்னார் இல்ல திருமணத்திற்கு வந்து வாழ்த்திய தலைவருக்கு நன்றி தெரிவித்து மீண்டும் சுவரொட்டிகள்.ஏதாவது கட்சியின் அரசியல் மாநாடு வந்து விட்டாலோ கட்சியின் தலைவர் பெயரில் "அழைக்கிறார்" சுவரொட்டிகள் முளைக்க ஆரம்பித்து விடும்.கட்சியிலோ,வாரியத்திலோஅல்லது அரசிலோ ஏதாவது பொறுப்பு யாருக்கேனும் கிடைத்துவிட்டால் மீண்டும் ப்ளெக்ஸ் போர்டுகள் ,சுவரொட்டிகள் நன்றி தெரிவித்து நகரெங்கும் ஓட்ட பெற்றிருக்கும். பத்திரிகளையும் விட்டு வைக்க மாட்டார்கள். பதவி கிடைத்தவரின் அடிவருடிகள் கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்து முழு பக்க விளம்பரங்கள் கொடுப்பார்கள்.இது போன்ற விளம்பரங்களுக்கு ஏங்குவது ஒரு வித மனோ வியாதி .தங்களின் விஸ்வாசத்தை காண்பிப்பதற்கு இதை விட்டால் வேறு வழி அவர்களுக்கு தெரியவில்லை போலும். இதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்ற போட்டி வேறு.இந்த போக்கு ஏதோ அரசியல்வாதிகளிடம் மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம்.இதை பார்த்து எல்லா மட்டத்திலும் இந்த வியாதி பரவ ஆரம்பமாகி விட்டது.சினிமா ரசிகர்கள் அவர்களின் பங்குக்கு இதை போல செய்கிறார்கள்.அதை விட கொடுமை பொதுமக்கள் தங்கள் வீட்டு விழாக்களுக்கும் வைபவங்களுக்கும் ப்ளெக்ஸ் போர்டுகள்,சுவரொட்டிகள் பத்திரிகை விளம்பரங்கள் போன்றவை கொடுப்பது தமிழகத்தில் மட்டுமே நடக்கும் ஓர் அதிசயம்.தங்கள் வீட்டு பெண்ணின் பூ பெய்தல் விழாவுக்கு நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டி சுவரெங்கும் தேர்தல் விளம்பரம் போல் பெரிய பெரிய எழுத்துகளில் வண்ண வண்ண அழைப்பிதழ்களை எழுதி வைப்பவர்களை பார்த்தால் என்ன தோன்றும் உங்களுக்கு?சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் ஒரு பொங்கல் தினத்தன்று காலையில் சாலைக்கு வந்த நான் பார்த்தது இன்றும் நன்றாக நினைவிருக்கிறது.அன்றைய தினம் புகழின் உச்சியில் இருந்த ஒரு கவர்ச்சி நடிகையின் ரசிகர்கள் அந்த நடிகையின் பெயரில் மதுரை வாழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து என்று நகரெங்கும் சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள்.இதனால் யாருக்கு என்ன லாபம்.?தங்கள் கை காசை செலவழித்து யாரோ ஒரு நடிகையின் பெயரில் நகர மக்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்வதால் இவர்கள் அடையும் பயன் என்ன? இதற்கெல்லாம் ஒரே காரணம் தான் உண்டு.அந்த சுவரொட்டிகளில் தங்களின் பெயரும் வந்து எல்லோரும் படிப்பார்கள், நாமும் பிரபலமாகலாம் என்ற ஆசை.இது போன்ற விளம்பர மோகத்தையும் துதிபாடிகளையும்,அரசியல் வாதிகளும் ,பிற பிரபலங்களும் தவிர்த்தால் மற்றவர்களும் அவர்களை பின்பற்றாமல் இருப்பார்கள்.புகழுக்கு மயங்காதவர் யாருமில்லை என்றே சொல்லலாம்.இருந்தாலும் அளவுக்கு அதிகமாக துதி பாடுவதும் அந்த துதிகளை ஏற்று கொள்வதும் ஒரு வித அருவருப்பை ஏற்படுத்துகிறது.அரசியல் வாதிகள் குறிப்பாக தலைவர்கள் இது போன்றைகளை அனுமதிக்க கூடாது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த ஒரு சம்பவம் என நினைவுக்கு வருகிறது.காந்திஜியின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருந்த நேரம்.அப்போது நான் படித்து கொண்டிருந்த கல்லூரியின் தாளாளர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். கல்லூரியில் ஒரு வார விழாவாக காந்திஜியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது .மாணவர்களுக்கு பல போட்டிகள் மாணவர்கள் பங்கேற்ற காந்திஜியை பற்றிய கவி அரங்கம்,பட்டி மன்றம் போன்றவை நடந்து கொண்டிருந்தது.விழாவின் கடைசி நாள் அன்று அன்றைய எதிர் கட்சி தலைவர் காமர்ரசர் வந்திருந்தார்.காந்திஜியின் நூற்றாண்டு விழா என்பதால் ஒப்பு கொண்டு வந்தார். அவர் கல்லூரிக்கு வருவது பற்றி யாருக்கும் முன்கூட்டியே தெரியாது. எந்த வித அறிவிப்பும் கிடையாது.வரவேற்ப்பு முன்னேற்பாடு என்று எதுவும் கிடையாது.ஒரு சுவரொட்டி கிடையாது,ஒரு வாழ்த்து அட்டை கிடையாது.திடீரென்று மாணவர்களிடையே ஒரு சலசலப்பு.என்னவென்று கேட்டபொழுது காமர்ரசர் கல்லூரி ஆடிடோரியம் முன்பு வந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள்.அவர் அரங்கத்தின் வாயிலை அடைந்த உடன் அவருடன் வந்த சிலரோ அல்லது மாணவர்களில் சிலரோ "தலைவர் காமராசர் வாழ்க " என்று கோஷம் போட்டனர்.காமராசர் அவர்களை திரும்பி பார்த்து முறைத்து விட்டு கைகளை உயர்த்தி காட்டி நிறுத்துங்கள் என்பது போல் சைகை செய்தார்.ஓரிரு வினாடிகள் மௌனமாக வந்த அவர்கள் அவர் முன்னே நடக்கவும் மீண்டும் கோஷம் எழுப்பினார்கள்.அவருக்கு வந்ததே ஒரு கோபம்.சட்டென்று திரும்பி பார்த்து "நிருத்துங்கன்னேன்" என்று உரக்க சொன்னார்.அவர்கள் கப்சிப் என்று அடங்கி விட்டனர்.வேகமாக நடந்து மேடைக்கு சென்று வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு உடனே சென்று விட்டார். இந்த நிகழ்ச்சியை நான் மிக அருகில் இருந்து பார்த்தேன். வெறும் வாழ்த்து கோஷம் போட்டதற்கே அவருக்கு அந்த அளவுக்கு கோபம் வந்தது.அவர் அதை ஆதரிக்கவில்லை.அது போன்று இன்றைய வளரும் தலைவர்களும் துதி பாடிகளை சற்று கட்டு படுத்தினால் அவர்களுக்கும் நல்லது தமிழ் நாட்டிற்கும் நல்லது .செய்வார்களா ?