1.தலையை திருப்பாமல் பின்புறம் பார்க்கும் திறன் உள்ள இரண்டு விலங்குகள் முயலும் கிளியும் மட்டுமே.
2 .பின்னோக்கி பறக்க கூடிய ஒரே பறவை ஹம்மிங் பேர்ட் மட்டுமே.
3.ஆங்கிலத்தில் 'Jiffy' என்று சொல்ல கூடிய அளவுகோல் ஒரு வினாடியின் நூறில் ஒரு பங்கு.
4 .ஒட்டகச்சிவங்கி 21 இஞ்சு நீளமுள்ள நாக்கினால் தனது காதுகளை சுத்தம் செய்யுமாம்.
5 .உலகில் உள்ள காடுகளில் 25 % சைபீரியாவில் உள்ளது.
6 . பாப்பா நியு கினியா என்ற சிறிய நாட்டில் அதிக பட்சமாக 800 மொழிகள் பேசும் மக்கள் வசிக்கிறார்கள்.
7 .பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை அளித்த நாடு நியுசிலாந்து - ஆண்டு -1893
8 .ஆஸ்ரேலியாவில் மொத்த மக்கட் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் கங்காருக்கள் உள்ளது.
9 .நெப்போலியன் காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்காக 1500 பெயர்கள் கொண்ட ஒரு பட்டியல் தயார் செய்து வைத்திருந்தாராம்.1984 ஆம் ஆண்டு வரை பெல்ஜியத்தில் குழந்தைகளுக்கான பெயர்களை இந்த பட்டியலில் இருந்து தான் தேர்வு செய்ய வேண்டுமாம்.
10 .சவூதி அரேபியாவில் நதிகளே கிடையாதாம்.

No comments:
Post a Comment