Saturday, December 15, 2012

பாதுகாப்பு குறித்த அலட்சியம்

சென்னையில் நகர பேரூந்தில் படிக்கட்டில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் ,பின் நோக்கி வந்த ஒரு லாரி மோதி பரிதாபமாக இறந்த செய்தி படிதத் போது மிகவும் வேதனையாக இருந்தது .இந்த துயர சம்பவத்திற்கு பிறகு ஒரே நாளில் காவல்துறையினர் படிக்கட்டில் பயணம் செய்ததற்காக 529 நபர்களுக்கு அபராதம் விதித்துள்ளார்கள்.படிக்கட்டில் பயணம் செய்வதின் ஆபத்து ஏதோ இன்று தான் காவல்துறையினருக்கு ஞானோதயம் வந்தது போல நடவடிக்கை எடுக்கிறார்கள்.போக்குவரத்து துறையினரும் கிஞ்சித்தும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலைபட்டதில்லை . ஆபத்து விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் இந்த இரண்டு துறையினரும் மிகவும் அலட்சியமாக இதை கையாண்டது தான் இது போன்ற விபத்துகளுக்கு காரணம் . மாணவர்களும் ஏதோ வீர சாகசம் செய்வது போல எண்ணிக்கொண்டு , சற்றும் பொறுப்பு இன்றி  நடந்து கொள்கிறார்கள் .விபத்து ஏற்பட்ட பின்பு அரசு துறையினர் மீது புகார் கூறும் இவர்கள் ,அவர்களது பாதுகாப்பு குறித்து மற்ற தரப்பினர் செய்த அறிவுரைகளை எல்லாம் இது நாள் வரை எள்ளி நகையாடினார்கள் . இன்று அந்த நான்கு மாணவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இது எவ்வளவு பெரிய இழப்பு ?
போதிய பேரூந்துகள் இல்லாததும் ,பள்ளி கல்லூரி நேரங்களில் ,அதிக நெருக்கடி உள்ள வழி தடங்களில் ,குறைந்த அளவு பேரூந்துகள் இயக்க படுவதும் ஒரு காரணம் . நெரிசல் இல்லாத பேரூந்துகளில் மாணவர்கள் கண்டிப்பாக படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய மாட்டார்கள்.போக்குவரத்து துறையினர் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலையை மாணவர்களுக்கு அளிப்பதை முதலில் தவிர்க்க முயற்சி செய்யவேண்டும் .உண்மையிலே போக்குவரத்து துறையினருக்கு பயணிகளின் பாதுகாப்பு குறித்து அக்கறை இருந்தால் தானியிங்கி கதவுகள் உள்ள பேரூந்துகளின் கதவுகளை திறந்து வைத்து இயக்குவார்களா ? நடத்துனர்களுக்கும் ,ஓட்டுனருக்கும் முதலில் பயணிகளின் பாதுகாப்பு குறிதத் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.இந்த தானியங்கி கதவுகளை இயக்கும் விசை ஓட்டுனரின் கட்டுபாட்டில் தான் உள்ளது.அவர் என் இதை சரியாக இயக்க தவறுகிறார்? இந்த பாதுகாப்பு முறை அறிமுகபடுதத் பட்டதே ,படிக்கட்டு பயணத்தை தவிர்ப்பதற்க்கே .இந்த வசதியை பயன்படுத்தும் நோக்கம் போக்குவரத்து துறையினருக்கு இல்லை என்றால் இந்த வசதி இல்லாத பேரூந்துகளையே வாங்கலாமே ! நமது பேரூந்து ஓட்டுநர்களையும் நடுத்துனர்களயும் அழைத்து சென்று ,பெங்களூர் நகர பேரூந்துகளில் ஓட்டுனரின் செயல்முறை காட்டி பயிற்சி அளிக்கவேண்டும். தானியங்கி கதவுகள் பேரூந்துகளில் நிறுத்தங்களில் மட்டுமே ஓட்டுனர் இந்த கதவுகளை திறப்பார்.பேரூந்து ஓட ஆரம்பிதத் அடுதத் கணமே கதவுகளை ஓட்டுனர் மூடிவிடுவார். நிறுத்தங்கள் தவிர வேறு எங்கும் கதுவுகளை திறப்பதில்லை .அது தவிர ,கதவு அடைத்திருந்தால் பேரூந்து நகர்வில் யாரும் ஏற முயற்சி செய்ய மாடார்கள் . கதவு திறந்து வைத்து கொண்டு ஓடும் ஒரு பேரூந்தை கூட பெங்களூரில் காண முடியாது.அது தவிர கதவு இல்லாத பழைய பேரூந்தில் கூட படிக்கட்டில் பயணம் செய்ய போக்குவரத்து துறையினரோ ,காவல்துறையோ அனுமதிப்பதில்லை .ஒரு துயர சம்பவம் நடந்த பின்பு நமது காவல்துறையினர் படிக்கட்டில் பயணம் செய்பவர்களை மோட்டார் வாகன சட்டப்படி அபராதம் விதிக்கிறார்கள் .எதோ அந்த சட்டம் இப்போது தான் இயற்ற பட்டது போல் .நமது நாட்டில் எல்லா சட்டமும் சரியாக தான் இருக்கிறது .அதை அமல் படுத்துவதில் தான் சிக்கல்.அதை அமல் படுதத் வேண்டியவர்களுக்கு அந்த சட்டத்தின் மேல் அவநம்பிக்கையா அல்லது அவர்களின் செயல் திறன் மேல் அவநம்பிக்கையா என்று தெரியவில்லை.

Tuesday, December 11, 2012

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 131 வது பிறந்த நாள் -11-12-2012

பாரதியாரின் 131 வது பிறந்த நாளை ஒட்டி ஹிந்து ஆங்கில  நாளிதழ் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் "'என்னை கவர்ந்த பாரதி யார்? " என்ற தலைப்பில் பிரபலங்கள் உரை காணொளிகளாக  வெளியிட்டுள்ளது .இணைப்புகள் இங்கே கொடுக்கபட்டுள்ளது .

பாடலாசிரியர் வைரமுத்துவின் பாரதியார் பற்றிய உரை .

திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர்  பாரதியார் பற்றிய 

Tuesday, October 26, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி 8

1. உலகில் சுமார் 17 விழுக்காடு மனிதர்கள் இடதுகை பழக்கம் உள்ளவர்களாம்.மனித குரங்குகளிலும் அதே விழுக்காடு இடது கை பழக்கம் உள்ளவைகளாம்.

2.நீங்கள் வலது கை பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும் போது உணவை வலது பக்கம் தான் அசை போடுவீர்களாம்.அதே போல இடது கை பழக்கம் உள்ளவர்கள் இடது பக்கம் அசை போடுவார்களாம்.

3.ஒன்பது வயது வரை ஐன்ஸ்டீனுக்கு சரியாக பேச வராதாம். மூளை வளர்ச்சி குன்ற்றிய குழந்தை என்று நினைத்தார்களாம்.

4.ஒவ்வொரு நாளின் பொழுதும் முந்திய நாளை விட 0.00000002 நொடிகள் அதிகமாக இருக்குமாம்.இது ஒரு நூற்றாண்டுக்கு 13 நொடிகல் அதிகமாகுமாம்.

5.பொதுவாக அனைத்து நாடுகளிலும் தலையை மேலிருந்து கீழே ஆட்டினால் ஆமாம் என்று சொல்வதாக தான் பொருள். ஆனால் புல்கேரியா மற்றும் அல்பாமியா நாட்டில் மட்டும் இல்லை என்று பொருளாம்.

6.டால்ஃபினுக்கு 3 வயிறு உண்டாம்

7.அழும் திறன் கொண்ட ஒரே இனம் மனிதன் மட்டும் தான்.

8.உலகில் நீர் வழி பயணம் முதல் முதலாக 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்த் பகுதியில் தான் ஆரம்பிக்கபட்டதாம்.

9.2600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்யபட்டதாம். சிசேரியன்,கண் புரை எலும்புமுறிவு மற்றும் சிறுனீரகத்தில் கல் போன்ற்றவைக்கு அறுவை சிகிச்சை செய்யபட்டு வந்ததாம்.

10.இந்தியாவில் 30,000 க்கும் மேல் பள்ளிவாசல்கள் உள்ளதாம்.உலகிலயே அதிக அளவில் பள்ளிவாசல் உள்ள நாடு இந்தியா தானாம்.

Friday, September 17, 2010

தமிழில் எண்கள் குறித்த சொற்கள்

நம்மில் பெரும்பாலோருக்கு எண்களை குறிக்கும் தமிழ் சொற்களில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம்,லக்ஷம்,கோடி வரை தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்க்கு மேல் உள்ள எண்களை குறிக்கும் சொற்களும் தமிழில் உள்ளது. அது தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


100000000 = அற்புதம் (அதாவது நூறு மில்லியனை குறிக்கும் சொல்)

1000000000 =நிகற்புதம் ( ஒரு பில்லியனை குறிக்கும் சொல்)

10000000000 =கும்பம் ( பத்து பில்லியனை குறிக்கும் சொல் )

100000000000 = கணம் (நூறு பில்லியனை குறிக்கும் சொல் )

1000000000000 = கற்பம் (ஒரு திரில்லியனை குறிக்கும் சொல் )

10000000000000 = நிகற்பம் ( பத்து திரில்ல்யனை குறிக்கும் சொல் )

100000000000000 =பதுமம் (நூறு திரில்ல்லியனை குறிக்கும் சொல் )

1000000000000000 = சங்கம் ( ஒரு ஜில்லியனை குறிக்கும் சொல் )

10000000000000000 = வெள்ளம் (பத்து ஜில்லியனை குறிக்கும் சொல் )

100000000000000000 = அன்னியம் (நூறு ஜில்லியனை குறிக்கும் சொல்)

1000000000000000000 = அர்த்தம் ( இதற்க்கு மேல் அங்கில எண்ணிக்கை தெரியவில்லை .தெரிந்தவர்கள் சொல்லலாம் )

10000000000000000000 = பரார்ட்டம்

100000000000000000000 = பூரியம்

1000000000000000000000= முக்கோடி

10000000000000000000000 = மகாயோகம்

( எங்கோ படித்தது )

Thursday, September 16, 2010

உங்களுக்கு தெரியுமா ? பகுதி -7

1 . யானையின் பல் 9 பவுண்டு வரை எடை இருக்குமாம்

2. கண்ணை மூடாமல் தும்மல் போட முடியாது

3. நீல கண்கள் உடையவர்களால் இருளில் நன்றாக பார்க்க இயலும்

4. சில சிங்கங்கள் ஒரு நாளைக்கு 20 முறை உடல் உறவு கொள்ளுமாம்

5. தரை வாழ் மிருகங்களிலே மிகவும் வேகமாக ஓட கூடியது சிறுத்தை தான் .2 நொடிகளில் 0 முதல் 70 கி.மீ வேகத்தை எட்டமுடியுமாம்

6. electric eel என்ற வகை மீன்களின் வாலில் 12 பல்புகள் எரிய கூடிய அளவுக்கு மின்சாரம் இருக்குமாம் .இந்த மின்சாரம் தாக்கினால் மனிதர்கள் இறக்க கூடும்

7. உலகிலயே அதிக சத்தம் எழுப்ப கூடிய விலங்கினம் Blue whale என்பது . 188 டெசிபல் அளவுக்கு இதனால் சத்தம் எழுப்ப முடியும்.

8. நத்தைகளால் 3 ஆண்டுகள் வரை உணவு உண்ணாமல் வாழமுடியும்

9. 2000 குழந்தைகளில் ஒரு குழந்தை ஒரு பல்லுடன் பிறப்பதுண்டு

10. ஒரு ரத்த cell ஒரு மனிதனின் உடல் முழுவதும் ஒரு முறை சுற்றி வர 60 நொடிகள் ஆகும்

Sunday, September 12, 2010

விரல் நுனியில் மதுரை

Madurai at Fingertips என்பது மதுரை பற்றி இணையத்தில் வந்துள்ள ஒரு புதிய தளம்.சற்று வித்தியாசமான தளமாக உள்ளது.மதுரை குறித்து பல சுவாரசியமான தகவல்கள் இந்த தளத்தில் உள்ளது. இது வரை பலருக்கும் அறியாத பல புதிய தகவல்களும் இந்த தளத்தில் உள்ளது.தலைப்பில் மட்டும் தமிழையும் சேர்த்துள்ளது தான் சற்று நெருடலாக உள்ளது.ஒரு சில பக்கங்களையாவது தமிழில் சேர்த்திருக்கலாம்.இந்த தளத்தில் பல பயனுள்ள இணைப்பு பக்கங்களும் உள்ளது.உள்ளூர் வாசிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் சேர்த்து தளத்தை உருவாகியிருப்பது தான் இந்த தளத்தின் தனி சிறப்பு.http://www.maduraiatfingertips.com/

Thursday, September 2, 2010

உங்களுக்கு தெரியுமா - பகுதி 6

1.கேட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன் மட்டுமே

2.எவ்வளவு பெரிய வைரக்கல் ஆக இருந்தாலும் அதன் பரமாணு அல்லது மூலக்கூறு என்பது ஓன்று ஆக மட்டுமே இருக்கும்

3.நாய்கள் அவைகளுக்கு தேவையான விட்டமின் சி சத்தை அவைகளே தயார் செய்து கொள்கிறது.

4.பூனைகளால் நூறு விதமான ஒலிகளை எழுப்ப முடியும்.ஆனால் நாய்களால் வெறும் பத்து விதமான ஒலிகளையே எழுப்ப முடியும்

5.உலகின் முதல் பல்கலைகழகம் நான்காம் நூற்றாண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்ட நாளந்தா பலகலைகழகம் தான்

6.உலகிலயே இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ள மிக பழமையான அணைக்கட்டு தமிழ் நாட்டில் உள்ள கரிகாலன் கட்டிய கல்லணை தான்

7.உலகிலயே அதிக அளவில் பள்ளி வாசல் உள்ள நாடு இந்தியா தான் சுமார் 300000 பள்ளி வாசல்கள் இந்தியாவில் உள்ளது.

8.உலகிலயே அதிகமான நபர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் இந்திய ரயில்வே துறை தான்.

9.பட்டம்பூசிகளுக்கு முதன் முதலில் இருந்த ஆங்கில பெயர் என்ன தெரியுமா ! flutterby என்பது தான்

10.வாத்து எழுப்பும் " குவாக் " என்ற ஒலிக்கு எதிரொலி வருவதில்லை .ஏன் என்று இது நாள் வரை யாராலும் கணிக்க முடியவில்லை