Sunday, October 12, 2008
நிதி நெருக்கடியும் தனி மனித பாதிப்புகளும்
நிதி நெருக்கடியில் இருந்து வங்கிகளை காப்பாற்றுவதற்கு சர்வ தேச அளவில் அரசுகள் நிதி உதவி செய்ய தொடங்கியுள்ளது.அமெரிக்கா ,பிரிட்டன் என்று பெரிய நாடுகளும் வங்கிகளுக்கு நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளார்கள். நமது நிதி அமைச்சர் பொது மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்கிறார் . இந்தியாவில் அடிப்படை பொருளாதாரம் நன்றாகவே உள்ளது என்றும் வங்கிகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார். ஆனால் ஒரு புறம் பங்கு சந்தை வீழ்ச்சி காணுகிறது.வங்கிகள் பிற நிதி நிறுவனங்களிலும் பங்குகளிலும் தான் முதலீடு செய்கின்றது.எப்படி இந்த பாதிப்பு வங்கிகளுக்கு இல்லாமல் போகும் என்று தெரியவில்லை.பொது மக்களை பொறுத்தவரை உடனடி பாதிப்பு என்று பார்த்தால் வங்கிகள் கொடுக்கும் கடன் அளவு பாதிப்புக்குள்ளாகும்.வங்கி கடன் வட்டி விகிதம் அதிகமாகும்.ஏற்கனவே உள்ள விலைவாசி உயர்வும் சேர்ந்து மக்களை வாட்டி எடுக்கும். பணபுழக்கம் குறைவாக உள்ள இந்த நேரத்தில்,கடன் உதவியும் இல்லை, வட்டி விகிதமும் அதிகம், விலை ஏற்றமும் அதிகம் என்றால் பொது மக்களுக்கு பாதிப்பு நிச்சயம் இருக்க தான் செய்யும்.இந்த சூழ்நிலையில் பத்திரிகையில் படித்த ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது.இங்கிலாந்து நாட்டில் Funeral Directors என்று உள்ளார்கள். அதாவது இறந்தவரின் உடலை இறுதி சடங்குகள் நடுக்கும் நாள் வரை பதப்படுத்தி வைத்து,ஈம கிரியைகள் எல்லாம் செய்து அடக்கம் செய்பவர்கள் தான் இந்த funeral directors .ஏழைகளுக்கு அந்த நாட்டில் இறுதி சடங்கு செய்வதற்கு அரசாங்க உதவி உண்டு.தற்போது உள்ள நிதி நெருக்கடியால் அரசாங்க நிதி கிடைப்பதற்கு தாமதம் ஆவதால் இந்த funeral directors முன்பணம் தந்தால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறுகிறார்களாம்.அரசாங்கம் நிதி நெருக்கடியால் பணம் தாமதமாக தான் கொடுக்க முடியும் என்று கூறுகிறார்களாம்.அங்கு இறந்த உடல் அடக்கம் செய்வதற்கு சராசரியாக பத்து நாட்கள் ஆகுதாம்.தற்பொழுது நிதி நெருக்கடியால் இது ஐந்து வார காலம் தாமதாகலாம் என்று கூறுகிறார்களாம்.அங்கு ஆண்டுக்கு சுமார் 27000 நபர்கள் இந்த அரசு உதவியயை பெறுகிறார்களாம்.இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?
Saturday, October 4, 2008
வருங்காலம் எப்படி இருக்கும்?
ரே கர்சவீல்(Ray Kurzweil) என்பவர் இன்றைய உலகில் எடிசனுக்கு இணையாக கருதப்படுபவர்.கணினி வந்த பின்பு நமது வாழ்க்கையில் பல விடயங்கள் மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.சர்வம் கணினி மயம் என்றாகிவிட்டது.இவர் பல விடயங்களை குறித்து கணிப்புகள் கூறியுள்ளார். அதிலொன்று 2025 ஆம் ஆண்டு மனித மூளைக்கு நிகரான செயல் திறன் உள்ள கணினி உருவாக்கப்படும் என்பது தான்.2030 இல் மனித மூளைய விட ஆயிரம் மடங்கு வேகமும் திறனும் உள்ள கணினிகள் தயாரிக்கப்படும் என்றும் கூறுகிறார்.இதற்க்கு மேலும் கூறுகிறார்.2045 களில் உருவாக்கப்படும் கணினிகள் மனித மூளை திறனால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மேம்பட்டு இருக்கும் என்கிறார்.இந்த நிலைமை எட்டும் காலத்தை அவர் "Point of Singularity" என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்.இவை எல்லாம் நடக்காது என்று யாராலும் அறுதியிட்டு கூறமுடியாது.நடப்பதற்கு சாத்தியகூறுகள் மிக மிக அதிகம்.ஆனால் நான் நினைப்பது ,இவ்வை எல்லாம் நடப்பதற்கு முன்பே உலகில் க்ளோனிங்க் மூலம் குழந்தைகளை உருவாக்க சட்டரீதியாகவே எதோ ஒரு நாட்டில் அனுமதிப்பார்கள் என்றே கருதுகிறேன்.கடந்த ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தால் ,நமது அன்றாட வாழ்கையிலேயே என்னவெல்லாமோ மாற்றங்கள் வந்துவிட்டது.
Subscribe to:
Comments (Atom)
