சென்னையில் நகர பேரூந்தில் படிக்கட்டில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் ,பின் நோக்கி வந்த ஒரு லாரி மோதி பரிதாபமாக இறந்த செய்தி படிதத் போது மிகவும் வேதனையாக இருந்தது .இந்த துயர சம்பவத்திற்கு பிறகு ஒரே நாளில் காவல்துறையினர் படிக்கட்டில் பயணம் செய்ததற்காக 529 நபர்களுக்கு அபராதம் விதித்துள்ளார்கள்.படிக்கட்டில் பயணம் செய்வதின் ஆபத்து ஏதோ இன்று தான் காவல்துறையினருக்கு ஞானோதயம் வந்தது போல நடவடிக்கை எடுக்கிறார்கள்.போக்குவரத்து துறையினரும் கிஞ்சித்தும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலைபட்டதில்லை . ஆபத்து விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் இந்த இரண்டு துறையினரும் மிகவும் அலட்சியமாக இதை கையாண்டது தான் இது போன்ற விபத்துகளுக்கு காரணம் . மாணவர்களும் ஏதோ வீர சாகசம் செய்வது போல எண்ணிக்கொண்டு , சற்றும் பொறுப்பு இன்றி நடந்து கொள்கிறார்கள் .விபத்து ஏற்பட்ட பின்பு அரசு துறையினர் மீது புகார் கூறும் இவர்கள் ,அவர்களது பாதுகாப்பு குறித்து மற்ற தரப்பினர் செய்த அறிவுரைகளை எல்லாம் இது நாள் வரை எள்ளி நகையாடினார்கள் . இன்று அந்த நான்கு மாணவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இது எவ்வளவு பெரிய இழப்பு ?
போதிய பேரூந்துகள் இல்லாததும் ,பள்ளி கல்லூரி நேரங்களில் ,அதிக நெருக்கடி உள்ள வழி தடங்களில் ,குறைந்த அளவு பேரூந்துகள் இயக்க படுவதும் ஒரு காரணம் . நெரிசல் இல்லாத பேரூந்துகளில் மாணவர்கள் கண்டிப்பாக படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய மாட்டார்கள்.போக்குவரத்து துறையினர் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலையை மாணவர்களுக்கு அளிப்பதை முதலில் தவிர்க்க முயற்சி செய்யவேண்டும் .உண்மையிலே போக்குவரத்து துறையினருக்கு பயணிகளின் பாதுகாப்பு குறித்து அக்கறை இருந்தால் தானியிங்கி கதவுகள் உள்ள பேரூந்துகளின் கதவுகளை திறந்து வைத்து இயக்குவார்களா ? நடத்துனர்களுக்கும் ,ஓட்டுனருக்கும் முதலில் பயணிகளின் பாதுகாப்பு குறிதத் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.இந்த தானியங்கி கதவுகளை இயக்கும் விசை ஓட்டுனரின் கட்டுபாட்டில் தான் உள்ளது.அவர் என் இதை சரியாக இயக்க தவறுகிறார்? இந்த பாதுகாப்பு முறை அறிமுகபடுதத் பட்டதே ,படிக்கட்டு பயணத்தை தவிர்ப்பதற்க்கே .இந்த வசதியை பயன்படுத்தும் நோக்கம் போக்குவரத்து துறையினருக்கு இல்லை என்றால் இந்த வசதி இல்லாத பேரூந்துகளையே வாங்கலாமே ! நமது பேரூந்து ஓட்டுநர்களையும் நடுத்துனர்களயும் அழைத்து சென்று ,பெங்களூர் நகர பேரூந்துகளில் ஓட்டுனரின் செயல்முறை காட்டி பயிற்சி அளிக்கவேண்டும். தானியங்கி கதவுகள் பேரூந்துகளில் நிறுத்தங்களில் மட்டுமே ஓட்டுனர் இந்த கதவுகளை திறப்பார்.பேரூந்து ஓட ஆரம்பிதத் அடுதத் கணமே கதவுகளை ஓட்டுனர் மூடிவிடுவார். நிறுத்தங்கள் தவிர வேறு எங்கும் கதுவுகளை திறப்பதில்லை .அது தவிர ,கதவு அடைத்திருந்தால் பேரூந்து நகர்வில் யாரும் ஏற முயற்சி செய்ய மாடார்கள் . கதவு திறந்து வைத்து கொண்டு ஓடும் ஒரு பேரூந்தை கூட பெங்களூரில் காண முடியாது.அது தவிர கதவு இல்லாத பழைய பேரூந்தில் கூட படிக்கட்டில் பயணம் செய்ய போக்குவரத்து துறையினரோ ,காவல்துறையோ அனுமதிப்பதில்லை .ஒரு துயர சம்பவம் நடந்த பின்பு நமது காவல்துறையினர் படிக்கட்டில் பயணம் செய்பவர்களை மோட்டார் வாகன சட்டப்படி அபராதம் விதிக்கிறார்கள் .எதோ அந்த சட்டம் இப்போது தான் இயற்ற பட்டது போல் .நமது நாட்டில் எல்லா சட்டமும் சரியாக தான் இருக்கிறது .அதை அமல் படுத்துவதில் தான் சிக்கல்.அதை அமல் படுதத் வேண்டியவர்களுக்கு அந்த சட்டத்தின் மேல் அவநம்பிக்கையா அல்லது அவர்களின் செயல் திறன் மேல் அவநம்பிக்கையா என்று தெரியவில்லை.